Updated:

Vikatan Kalaignar 100: “விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!” – விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழா, இன்று (20.09.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிக விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விகடன் பிரசுரத்தின் இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

Vikatan Kalaignar 100: முதல்வர் ஸ்டாலின்

Live Update

Vikatan Kalaignar 100: முதல்வர் ஸ்டாலின்

Yesterday at 5 PM

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழா நேரலை!

Yesterday at 7 PM

“விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!” – விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

“ `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலைப் பார்த்து மெய்மறந்துபோனேன். மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. `இதைப் பார்க்க அவர் இல்லையே…’ என்பதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது. அவர் பார்த்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார். அவர் இல்லை என்று சொன்னாலும், அவரின் அன்பு மகனான நான் மகிழ்ச்சியடைகிறேன். இதை திமுக-வினர் மட்டுமல்ல… பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் படித்து, பகிர்ந்துகொள்ள வேண்டும்!’’ – `கலைஞர் 100’ நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்.

முன்னதாக, “தமிழகத்தில் அனைத்து நூலகங்களுக்கும், பல்வேறு பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கப்படும் பணியை விரைவுபடுத்த வேண்டும். அரசு நூலகங்களுக்கு நூல்களை வாங்கும் நடைமுறை, அதற்கான தேர்வுக்குழு ஆகியவற்றை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது சிறப்பாக இருக்கும். சிறு பதிப்பாளர்களை அரவணைத்து, நல்ல நூல்களை ஆதரித்து, அவற்றை நூலகங்களில் இடம்பெறச் செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்” என விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் விழா மேடையில் கோரிக்கை வைத்திருந்தார்.

அது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “விகடன் குழும நிர்வாக இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு ஆட்சி செயல்படுத்திவரும் நல்ல திட்டங்களை பத்திரிகைகள் மனப்பூர்வமாக ஆதரித்து, எழுத வேண்டும். அப்படி எழுதினால்தான், நீங்கள் விமர்சிக்கும்போதும் உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதையும் ஆதரித்து எழுதாமல், விமர்சனத்தை மட்டும் எழுதினால் அதற்கு மதிப்பு இருக்காது. சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக் காட்டுவதும்தான் நடுநிலைப் பத்திரிகை தர்மம். அதன்படி தமிழக ஊடகங்கள் நடந்துகொள்ள வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. இதை அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால், அது மட்டும் போதாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகைகளும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். எனக்காக அல்ல… இந்த நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, சமூகத்துக்காக இதைச் செய்ய வேண்டும்!’’ என்றார்.

Yesterday at 7 PM

“சமூகநீதி, கூட்டாட்சிக்குரல் என தென்னிந்தியாவின் முக்கியத் தலைவராகத் திகழ்கிறார் நமது முதல்வர்!” –  கமல்ஹாசன்

Vikatan Kalaignar 100: ``விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!" - விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

“ `ஆலமரத்தின் அடியில் விருட்சங்கள் வளராது’ எனும் பொதுக்கூற்றை முறியடித்து, தானும் ஒரு விருட்சமாக வளர்ந்துவருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜனநாயகம், சமூகநீதி, கூட்டாட்சிக்குரல் என்று தென்னிந்தியாவின் முக்கியத் தலைவராகத் திகழ்கிறார் நமது முதல்வர். ஆதிக்க சாதி வீட்டில், இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு பணிந்து நாயனம் வாசிக்க மாட்டேன்’ என சிறு வயதிலேயே மறுக்கும் தன்மை கலைஞருக்கு இருந்திருக்கிறது. கலைஞர் எழுதியது 178 புத்தகங்கள். கிட்டத்தட்ட 2 லட்சம் பக்கங்கள். காந்தியாருக்கு அடுத்து இத்தனை பக்கங்கள் எழுதிய ஒரே அரசியல் தலைவர் கலைஞர்தான்!’’ – `கலைஞர் 100’ நூல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் உரை!

“ஆட்சியில் பல புதுமைகளைச் செய்து வருகிறார் முதல்வர்!” – தினமலர் அசோசியேட் எடிட்டர் கிருஷ்ணமூர்த்தி

Vikatan Kalaignar 100: ``விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!" - விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

“ஆட்சியில் பல புதுமைகளைச் செய்துவருகிறார் நம் முதல்வர். வரலாற்றிலும் முதல்வர் கால்பதித்துவருகிறார். அவரது வழிகாட்டுதலில் தொல்லியல்துறை பல சாதனைகளைப் படைத்துவருகிறது. தமிழக வரலாற்றின் பல்வேறு புதிய பரிமாணங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிப்பட்டிருக்கின்றன. அவரது பணி சிறக்க, தினமலர் சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறேன்!” – ’கலைஞர் 100’ நூல் வெளியீட்டு விழாவில் தினமலர் அசோசியேட் எடிட்டர் கிருஷ்ணமூர்த்தி.

Yesterday at 7 PM

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை வாங்குவதற்கு…

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் ——>>> https://bit.ly/3Zpcc0r

Yesterday at 6 PM

`இந்திய அரசியலையே மாற்றக்கூடிய இடத்தில் கலைஞர் இருந்திருக்கிறார்!’ – `தி இந்து’ என்.ராம்

Vikatan Kalaignar 100: ``விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!" - விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Yesterday at 6 PM

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்!

Yesterday at 6 PM

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Vikatan Kalaignar 100: ``விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!" - விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Yesterday at 6 PM

Yesterday at 6 PM

“`கலைஞர்’, `விகடன்’ உறவு; மலர்கள் தூவிய பாதையாகவும், முட்கள் கிழிக்கும் வீதியாகவும் இருந்திருக்கிறது!”- விகடன் இயக்குநர்

Vikatan Kalaignar 100 - பா.சீனிவாசன்

Vikatan Kalaignar 100 – பா.சீனிவாசன்

நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரை வழங்கும் விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசன், “ `கலைஞர்’ என்ற நான்கெழுத்து சொல்லுக்கும், `விகடன்’ என்னும் நான்கெழுத்து சொல்லுக்கும் கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால நெருக்கமான உறவு இருக்கிறது. இந்த உறவு, பாசமும் போராட்டமுமான உறவு. பல நேரங்களில் அது மலர்கள் தூவிய பாதையாகவும், சில நேரங்களில் முட்கள் கிழிக்கும் வீதியாகவும் இருந்திருக்கிறது. ஆனால், அந்த உறவில் எவருமே மாண்பு மீறியது இல்லை, தீங்கு நினைத்ததில்லை!” எனக் கூறினார்.

Yesterday at 5 PM

தொடங்கியது `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழா!

Yesterday at 5 PM

தொடங்கியது `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழா!

Vikatan Kalaignar 100: ``விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!" - விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Yesterday at 5 PM

Yesterday at 5 PM

விழா அரங்கத்தில் சிறப்பு விருந்தினர்கள்!

Yesterday at 5 PM

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ விழா அரங்கத்தில் கமல்ஹாசன்!

Yesterday at 4 PM

கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள்!

Yesterday at 3 PM

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழா! – ஏற்பாடுகள் மும்முரம்!

Yesterday at 3 PM

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழா!

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும்விதமாக, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான கலைஞர் கருணாநிதி தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ என்ற நூலில் சரமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலின் வெளியீட்டு விழா, இன்று (20.09.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிக விமர்சையாக நடைபெறவிருக்கிறது. விகடன் பிரசுரத்தின் இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொள்கிறார்.

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் ——>>> https://bit.ly/3Zpcc0r

Vikatan Kalaignar 100

Vikatan Kalaignar 100

அதைத் தொடர்ந்து, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனின் வரவேற்புரையும், தி இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினத்தந்தி இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினமலரின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் எல்.ஆதிமூலம் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்குகின்றனர். இறுதியாக ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன் நன்றியுரை வழங்குகிறார்.

இன்று மாலை 5:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி இலவசம்… அனைவரும் வாரீர்!

 

Author