கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் பலி

Parliament of Sri LankaSri Lanka Police InvestigationWestern Province
 2 மணி நேரம் முன்

Join us on our WhatsApp Group

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பின் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டவர்

கொழும்பின் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டவர்

விபத்து

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில் அமைச்சர் உட்பட மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் பலி | State Minister Sanath Nishant Died In The Accident

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

மேலும், விபத்தில் ஜெயக்கொடி என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் பலி | State Minister Sanath Nishant Died In The Accident

முடிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரின் பெயர்

முடிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரின் பெயர்

பிரதிப் பொலிஸ் மா அதிபராக நடித்து கப்பம் பெற்ற நபர் கைது

பிரதிப் பொலிஸ் மா அதிபராக நடித்து கப்பம் பெற்ற நபர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGallery

Author