ஊட்டி தைப்பூசத் திருவிழா: ரோஜா மாலை; ராஜ அலங்காரம்; பக்தர்கள் சூழ பவனி வந்த ஸ்ரீபால தண்டாயுதபாணி!

மலேசியாவில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் இருப்பதைப் போன்றே 44 அடி உயரத்தில் ஊட்டியில் முருகன் காட்சியருளுகிறார்.

Published:Updated:
எல்க்ஹில் முருகன்

எல்க்ஹில் முருகன்

0Comments
Share

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளான தைப்பூசம், முருக பெருமான் வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள எல்க்ஹில் மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

எல்க்ஹில் முருகன்

எல்க்ஹில் முருகன்

இயற்கை எழில் சூழ்ந்த திருமான்குன்றம் என்று அழைக்கப்படும் எல்க்ஹில் மலையில் எழுந்தருளியுள்ள நூற்றாண்டுப் பழைமையான ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலேசியா பத்துமலையில் உள்ளது போன்ற திருக்கோலத்தில் 44 அடி உயரத்தில் முருகப்பெருமான் காட்சியருளி வருகிறார். நடப்பு ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 15 -ம் தேதி காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, 24 -ம் தேதிவரை பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன். நேற்றுமுன்தினம் காலை 5 மணியில் இருந்து 8.15 மணி வரை 11-ம் நாள் பூஜை, பெருந்திரு முழுக்காட்டல் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேர் ஊா்வல நிகழ்ச்சி நேற்று பகல் 11.55 மணிக்குத் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டு ரோஜா இதழ் மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானின் தேரை வடம் பிடித்து ரத ஊர்வலத்தைத் தொடங்கிவிஅத்தார்.

எல்க்ஹில் முருகன்

எல்க்ஹில் முருகன்

எல்க்ஹில் பால தண்டாயுதபாணி கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் அங்கிருந்து ஊட்டி நகரில் மாாியம்மன் கோயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்தது. மாலையில் தேர் மீண்டும் கோயிலைச் சென்றடைந்தது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தாிசனம் செய்தனா். எல்க்ஹில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. 27 – ம் தேதி விடையாற்றி, சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Author