சிறீதரனை மிரட்டிய சுமந்திரன்! அடுக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டுகள்

Ilankai Tamil Arasu KachchiM A SumanthiranSri Lanka
 1 மணி நேரம் முன்

Join us on our WhatsApp Group

கட்சியின் பதவி தெரிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக, தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை, சுமந்திரன் பகிரங்கமாக மிரட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்றம் சட்ட ஒழுங்குகளுக்காக உள்ளது.தமிழரசு கட்சியில் பலர் உள்ளனர்.

இந்நிலையில் சில வழக்குகளில் வெற்றி பெற்றதால்.கட்சி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் நீதிமன்றத்தை நாடுவதாக கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சுமந்திரன் வெற்றிப்பெற்ற வழக்கை சாட்டி தமிழரசுக்கட்சியின் தலைமையை ஏமாற்ற முடியாது.பொதுச்சபையின் செயலாளரை சுமந்திரன் தெரிவு செய்தமை கட்சியின் ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்,

 

போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சி.ஐ.டியிடம் முறைப்பாடு

போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சி.ஐ.டியிடம் முறைப்பாடு

 

 

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா மீண்டும் எறிகணைகள் வீச்சு

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா மீண்டும் எறிகணைகள் வீச்சு

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
Author