சிறிநேசனை வெளியேற்றுவதில் மிக நுட்பமாக செயற்பட்ட சுமந்திரன் மற்றும் சாணக்கியன்

Ilankai Tamil Arasu KachchiM A SumanthiranS Shritharan
 2 மணி நேரம் முன்

Join us on our WhatsApp Group

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவின் போது சிறிநேசன் விடயத்தில் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் மிக நுட்பமாக செயற்பட்டுள்ளதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளக அரசியல் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியின் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான செயற்பாடாக பொதுச்செயலாளர் தெரிவில் இடம்பெற்ற மோதல் சம்பவம் பதிவாகியுள்ளதுடன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன் அரசியல் மட்டத்தில் எதிர்காலத்தில் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழ்த்தேசிய நோக்கில் செயற்பட்ட சிறிநேசன் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பதில் சிறீதரன் உறுதியாக செயற்பட்டிருக்க வேண்டும்.

சுமந்திரன் தொடர்பில் எழுந்த பல்வேறு விமர்சனத்திற்கு மத்தியில் தமிழ்த்தேசிய நோக்கில் சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் சிறிநேசன் தீவிரமாக செயற்பட்டவராவார்.

இந்நிலையில் தலைவர் தெரிவில் தோல்வியடைந்த சுமந்திரன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக மீண்டும் அறிவித்தமை அவரின் அரசியல் யுக்தியை தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Author