யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வருகை தந்த ரம்பா
RambhaJaffnaSri LankaHariharan
1 மணி நேரம் முன்
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர்.
எதிர்வரும் (9)ஆம் திகதி Northern Uni இன் ஏற்பாட்டில குறித்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இசை நிகழ்ச்சி
இந்த இசை நிகழ்ச்சி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவிருந்தது.
மேலும், இசை நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி, யோகிபாபு, நடிகை தமன்னா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனினும், அப்போது நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வானது பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |