கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட ஏழு மனித எச்சங்கள்

MullaitivuNorthern Province of Sri Lanka
 3 hours ago

Join us on our WhatsApp Group

முல்லைத்தீவு (Mullaitivu) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 6ஆவது நாளா நேற்று(10) மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்தோடு ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நிறைவு நாட்களில் அடையாளம் காணப்பட்ட நான்கு மனித எச்சங்கள் அதழ்தெடுக்கப்படாது காணப்படுகின்ற நிலையில் ஏற்கனவே இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் இவை அகழ்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்கா காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள்

அமெரிக்கா காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள்

 

ஆறாம் நாள் அகழ்வாய்வுகள்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட ஏழு மனித எச்சங்கள் | 7 Human Remains Have Identified At Kokuthotuvai

இரண்டாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின்  இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அகழ்வு பணிகளை கண்காணிதார்.

அந்தவகையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதியின் அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் மூன்று மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் விவாதம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் விவாதம்

 

துப்பாக்கி சன்னங்கள்

மேலும் அவ் எலும்புக் கூட்டுத்தொகுதிகளோடு துப்பாக்கி சன்னங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் வேலி கம்பிகளின் துண்டுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட ஏழு மனித எச்சங்கள் | 7 Human Remains Have Identified At Kokuthotuvai

இவ்வாறு அடையாளப் படுத்தப்பட்டுள்ள ஏழு மனித எச்சங்களையும் வரும் நாட்களில் முழுமையாக வெளியே எடுக்க முடியும் என அகழ்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் மனித உரிமை சட்டத்தரணி நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

 

வெளிநாடொன்றில் திடீரென விமானத்தின் கதவைத் திறந்த பெண்ணால் பரபரப்பு

வெளிநாடொன்றில் திடீரென விமானத்தின் கதவைத் திறந்த பெண்ணால் பரபரப்பு

 

 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

Gallery

Gallery

Author