மாவையுடன் ரணில் திடீர் சந்திப்பு! அரசியல் தீர்வு குறித்து விசேட பேச்சு

JaffnaMavai SenathirajahRanil WickremesingheSri Lanka Presidential Election 2024srilankapresidentialelection2024
 2 hours ago

Join us on our WhatsApp Group

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

 

இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்

இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்

 

தீர்க்கப்படாத இனப்பிரச்சினை

 

இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மாவையுடன் ரணில் திடீர் சந்திப்பு! அரசியல் தீர்வு குறித்து விசேட பேச்சு | President Ranil Suddenly Met Maavi

 

தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவையுடன் ரணில் திடீர் சந்திப்பு! அரசியல் தீர்வு குறித்து விசேட பேச்சு | President Ranil Suddenly Met Maavi

தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு, அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொச்சிக்கடையை சேர்ந்த ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொச்சிக்கடையை சேர்ந்த ஒருவர் கைது

 

 

சஜித்தை ஆதரித்த சுமந்திரன் அணியின் இரகசிய பின்னணிகள் அம்பலம்

சஜித்தை ஆதரித்த சுமந்திரன் அணியின் இரகசிய பின்னணிகள் அம்பலம்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
Author