ரணிலை கழித்தால் 950 ரூபாவே கிடைக்கும்
Freelancer / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 02:23 – 0 – 12
பாராளுமன்றத்தில் செவ்வாய்கிகிழமை (25) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறிவிட்டனர் தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டியேலே இருந்தனர். ஆனால் இன்று தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கி்ன்றனர்.நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்
இது இவ்வாறு இருக்கத்தக்க விரைவில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்கட்டண சூத்திரத்தை மக்கள் சார்பானதாக மாற்றியமைப்போம் என தெரிவித்திருந்தனர். எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிப்பை விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.
இவ்வாறு மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும் போது இது புதிய முதலீடுகளுக்கும் பொதுமக்களும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.