ரசிகர்கள், பயணிகள் நடிகர் மம்மூட்டியின் வீட்டில் தங்க ஏற்பாடு – ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?
மம்மூட்டி வசித்த எர்ணாகுளம் பனம்பிள்ளி வீட்டில் வசிக்க ரசிகர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விகேசன் என்ற சுற்றுலா நிறுவனம்ஏற்பாடு செய்துள்ளது.

Mammootty – மம்மூட்டி
மலையாள மெகாஸ்டார் நடிகர் மம்மூட்டி-க்கு கேரளாவில் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். கேரள மாநிலம் கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் சுமார் 10 ஆண்டுகள் வசித்துவந்தார் மம்மூட்டி. இப்போது எர்ணாகுளம் எளம்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார் மம்மூட்டி.

இந்த நிலையில் மம்மூட்டி வசித்த எர்ணாகுளம் பனம்பிள்ளி வீட்டில் வசிக்க ரசிகர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விகேசன் என்ற சுற்றுலா நிறுவனம் அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. அந்த வீட்டில் மம்மூட்டி சூட், துல்கர் அபோட், விருந்தினர் அறை உள்ளிட்ட நான்கு அறைகள் உள்ளன. இவற்றில் ஒரே சமயத்தில் எட்டு பேர் தங்கலாம்.
Also Read

மம்மூட்டி உடல் நலம் பெற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்திய நடிகர் மோகன்லால்
பிரைவேட் தியேட்டர், கேலரி உள்ளிட்ட இடங்களை பர்வையிடலாம். ஓர் நாள் இரவு தங்க 75,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இங்கு வசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியம் 2 மணிக்கு செக் இன் செய்தால் மறுநாள் காலை 11 மணிவரை வசித்துக்கொள்ளலாம்.

இதுகுறித்து கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் reservations@vkation.com என்ற இ மெயிலிலும் தொடர்புகொள்ளலாம்.
மம்மூட்டி ஹவுசில் தங்கினால் மம்மூட்டியை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என பலரும் விசாரிக்கிறார்கள். ஆனால், அதற்கு வாய்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேருக்கு குறைவானோர் வசித்தாலும் அதே வாடகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.