Apple: கொளுத்தும் வெயிலில் விளையும் ஆப்பிள்; ராஜஸ்தான் விவசாயி சாதனை!
ஆப்பிள் வெப்பம் அதிகம் இருக்கும் பகுதியிலும் வளரும் என சாதித்து காட்டியிருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ் கெதர்.
சந்தோஷ் கெதர்
காஷ்மீர்தான் ஆப்பிளின் ராஜ நகரம் எனக் கூறப்படுவதுண்டு. ஏனென்றால் ஆப்பிள் குளிர்ந்த பிரதேசத்தில் மட்டுமே வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை உடைத்து, ஆப்பிள் வெப்பம் அதிகம் இருக்கும் பகுதியிலும் வளரும் என சாதித்து காட்டியிருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தோஷ் கெதர்.
இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், “ராஜஸ்தானில் கோடை வெப்பநிலை 49 டிகிரி வரை செல்லும். ஆனால், இந்த வெப்பநிலையில், இமயமலைக்கு நிகரான இடத்தில் வளரும் ஒரு பழத்தை வளரவைக்க முடியுமா? என்றக் கேள்வி எனக்கு இருந்தது.

எங்களிடம் இருந்த 1.25 ஏக்கர் நிலத்தில், எலுமிச்சை, கொய்யா, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவைதான் பயிரிட்டிருந்தோம். அப்போதுதான் ஆப்பிள் மரம் ஒரு கற்பனையாகத் தோன்றியது. குஜராத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையிடமிருந்து 2015-ம் ஆண்டு ஆப்பிள் மரக்கன்று ஒன்றை வாங்கி பயிரிட்டோம். ஆரம்பத்தில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் தொடர்ந்து நாங்கள் தண்ணீர் ஊற்றினோம், தேவைக்கேற்ப கரிம உரங்களைப் பயன்படுத்தினோம்.
Also Read
“ ‘இதெல்லாம் தேவையா?’னு கேட்டவங்க, இப்போ… தேடித்தேடி வர்றாங்க!” – ‘இயற்கை விவசாயி’ கிரிஜா
எங்களுடைய அண்டை வீட்டார் இந்த யோசனையைப் பார்த்து சிரித்தனர். ஆனால், அவர்களின் அவநம்பிக்கையை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஒரு வருடம் கழித்து, அதில் ஆப்பிள்கள் வளர்வதைக் கண்டதும்தான் முழு நம்பிக்கை வந்தது. இரண்டாவது ஆண்டில், கிட்டத்தட்ட 40 கிலோ பழங்களைத் தந்தது. இப்போது ஒவ்வொரு பருவத்திலும் 6,000 கிலோவுக்கு மேல் பழங்களை விளைவிக்கும் ஒரு செழிப்பான ஆப்பிள் பண்ணையாக மாறியிருக்கிறது.

இந்த எதிர்பாராத வெற்றிக்கான ரகசியம், தீவிர வெப்பநிலையைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட HRMN-99 ஆப்பிள் வகையாகும். ராஜஸ்தான் ஆர்கானிக் சான்றிதழ் நிறுவனத்திடமிருந்து எங்களிடம் கரிம வேளாண்மை சான்றிதழ் இருப்பதால், இமாச்சல், காஷ்மீர் ஆப்பிள்களின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 என்றால், நாங்கள் அதை கிலோவுக்கு ரூ.150-க்கு விற்கிறோம். எங்களின் இந்த முயற்சி சிகார், ஜுன்ஜுனு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உத்வேகமாக மாறியிருக்கிறது.” என்கிறார்.
Also Read

ஆண்டுக்கு 10 லட்சம்; மரம் வளர்ப்பு, காய்கறி, விதை உற்பத்தி; விருது வாங்கிக் கொடுத்த இயற்கை விவசாயம்
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks