வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய இளைஞர்கள்

BatticaloaS. ViyalendiranSri Lankan Peoples
 23 minutes ago

Join us on our WhatsApp Group

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்தமையை மட்டக்களப்பில் இளைஞர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

கைது நடவடிக்கை

வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றினைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று (25) இரவு 9.00 மணியளவில் வெடி கொளுத்திகொண்டாடியுள்ளனர்.

வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய இளைஞர்கள் | Celebrate Former State Minister Arrest Batticaloa

 

முன்னாள் அமைச்சர் கைது விவகாரத்தையடுத்து மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிய நிலையில் சம்பவதினமான நேற்று இரவு சுமார் 09.00 மணியளவில் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் ஒன்றிணைந்து வெடிகளை கொளுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதி வெடி சத்தத்தினால் அதிர்ந்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Author