வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
காஜூ கத்லி
தேவையான பொருட்கள்
முந்திரி. 1/2கிலோ
சர்க்கரை. 200கிராம்
கோவா. 100கிராம்(சர்க்கரை சேர்க்காதது)
நெய். சிறிதளவு
பிஸ்தா. சிறிதளவு
செய்முறை
*முந்திரியை மிதமான சூடுள்ள தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும் .அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து அதில் அரைத்த விழுதை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது சர்க்கரை, கோவா சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி டைமண்ட் வடிவக் துண்டுகளாகவும். மேலே பொடித்த பிஸ்தாப் பருப்புகளைத் தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான காஜூ கத்லி ரெடி.
2.ரசகுல்லா
தேவையான பொருட்கள்
தண்ணீர் முற்றிலும் நீக்கப்பட்ட பனீர். 1/2கிலோ
மைதா மாவு. 10கிராம்
சர்க்கரை. 10 கிராம்
ரோஸ் எசன்ஸ். 4துளிகள்
ஏலக்காய். 10கிராம்(தோலுரித்தது)
சுடுதண்ணீர் 250 மி.லி
சர்க்கரை. 1கிலோ
தண்ணீர். 6 டம்ளர் அல்லது (தேவையான அளவு)
செய்முறை
பன்னீரில் மைதா மாவு மற்றும் ரோஸ் எசென்ஸ் சேர்த்து பிசையவும் நன்கு பிசையவும். கடைசியாக 10 கிராம் சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும் . ஒவ்வொரு உருண்டையினுள்ளும் சிறிது ஏலக்காய் பொடி வைக்கவும் . அடுப்பில் சர்க்கரை சிரப் கொதித்ததும் இந்த பனீர் உருண்டைகளை மூன்று அல்லது நான்காகப் போடவும். ( இவை ஒன்றோடொன்று மோத கூடாது ) 20 நிமிடங்கள் இந்த உருண்டைகளை ‘சுகர் சிரப்’பில் வேகவிட வேண்டும். (ரசகுல்லா வெந்து விட்டதா என்று அறிய குளிர்ந்த தண்ணீரில் ரசகுல்லாவை போட்டால் மிதக்கக்கூடாது .
சர்க்கரை சிரப் ரொம்ப கெட்டியாகி விடாமல் இருக்க அவ்வப்பொழுது சுடு தண்ணீர் ஊற்ற வேண்டும் ..ரசகுல்லாக்கள் நன்கு ஆறியதும் பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்களுக்குப் பின் சாப்பிட சுவை கூடும். மீந்த சர்க்கரை சிரப்பை ரசகுல்லா க்களின் மேலாக ஊற்றி வைக்கவும்.
விருந்தினர்களுக்கு ரசகுல்லாவை… மகிழ்வுடன் பரிமாற சந்தோஷம் இரட்டிப்பாகும்.
3. பைவ் ஸ்டார் மித்தாய்
தேவையான பொருட்கள்
எல்லா காய்கறிதுருவலும் சேர்ந்த கலவை. 1கப்
( கேரட், பீட்ரூட், முள்ளங்கி)
தேங்காய் துருவல் 1/4கப்
முந்திரி தூள். 1/4கப்
சர்க்கரை இல்லாத கோவா – 1/4கப்
நெய். 1/2கப்
ஏலக்காய்த்தூள் 1டீஸ்பூன்
சர்க்கரை. 4கப்
செய்முறை
*அடி கனமான வாணலியில் 5 டீஸ்பூன் நெய் விட்டு காய்கறி துருவலைப் போட்டு, மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும். சர்க்கரை ,தேங்காய் துருவல் முந்திரி தூள், கோவா… எல்லாவற்றையும் கலந்து மேலும் நன்கு கிளறவும் .மீதமுள்ள நெய்யை விட்டு ,ஏலக்காய்த்தூள் தூவி மேலும் நன்கு கிளறி வாணலியில் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும் .மேலும் இரண்டு கிளறு கிளறி தட்டில் கொட்டி சமப்படுத்தி வில்லைகள் போடவும் சத்தும் சுவையும் நிரம்பிய டூ இன் ஒன் பர்பி இது.செமடேஸ்டான பர்பி இது.
4. முந்திரி மைசூர் பா
தேவையான பொருட்கள்
கடலைமாவு. 1கப்
முந்திரி பருப்பு. 1/4கப்
சர்க்கரை 2கப்
நெய் இரண்டரை கப்
செய்முறை
*முந்திரிப்பருப்பை மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , ஒற்றை கம்பி பதத்தில் பாகு வைக்கவும். முந்திரிப்பொடியையும்+ கடலை மாவையும் ஒன்றாக கலந்து பாகில் தூவிக்கொண்டே நன்றாகக் கிளறவும். எல்லாம் சேர்ந்து தளதளவென்று கொதிக்கும் பொழுது , பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் நெய்யை க்காய்ச்சி கொண்டு, ஒவ்வொரு கரண்டியாக ஊற்றினால் நுரைத்துக் கொண்டு வரும். பக்கவாட்டில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.
வாயில் போட்டால் கரையும் இந்த முந்திரி மைசூர்பா.
தீபாவளின்னாலே ஞாபகத்துக்கு வர்றது மைசூர் பா,அல்வா, போன்ற பாரம்பரியமான இனிப்பு வகைகள் தான். இந்த இனிப்பு வகைகளை வீட்டிலேயே செய்து தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுவோம்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்,
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.