Live சொத்துக் குவிப்பு வழக்கு: “பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்” – நீதிமன்றம் அதிரடி

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது 2016-ம் ஆண்டு தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் அவரை குற்றவாளி தீர்ப்பு வழங்கிய நிலையில் தற்போது தண்டனை விவரங்களை அறிவிக்கிறது.

பொன்முடி

Live Update

பொன்முடி

39 mins ago

பதவியை இழந்தார் பொன்முடி?!

Live சொத்துக் குவிப்பு வழக்கு: ``பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்” - நீதிமன்றம் அதிரடி

Today at 10 AM

“பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை”

Live சொத்துக் குவிப்பு வழக்கு: ``பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்” - நீதிமன்றம் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொன்முடி, அவரின் மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை மேல்முறையீடு செய்வதற்க்காக 30 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Today at 10 AM

“பொன்முடியின் வயதை, மருத்துவ காரணங்களை தீர்ப்பில் கணக்கில் கொள்ள வேண்டும்” –  என்.ஆர்.இளங்கோ வாதம்

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக நீதிமன்றத்தில் நீதிபதி வருகைக்கு பின், “பொன்முடியின் வயதை, மருத்துவ காரணங்களை தீர்ப்பில் கணக்கில் கொள்ள வேண்டும்” என என்.ஆர்.இளங்கோ வாதத்தை முன்வைத்துள்ளார். மேலும் அவரின் மருத்தவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Today at 10 AM

உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி!

Live சொத்துக் குவிப்பு வழக்கு: ``பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்” - நீதிமன்றம் அதிரடி

இந்த வழக்கில், இன்று பொன்முடியும், அவரது மனைவியும் ஆஜராகி உள்ளனர். பொன்முடி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அஸ்வின் ஆஜராகி உள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கறிஞர் முத்து மீரான் ஆஜராகி உள்ளார்.

Today at 9 AM

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில்,”2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 சொத்து சேர்த்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,”லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை” எனக் கூறி இருவரையும் 2016-ம் ஆண்டு விடுதலை செய்தது.

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதி, “பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இருவரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Author