திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள் சிக்கியது எப்படி?!Vikatan

வீட்டில் வேலை செய்த பெண், தாக்கப்பட்ட சம்பவத்தில் பல்லாவரம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகன் ஆன்டோ மதிவாணன், அவரின் மனைவி மர்லினா ஆகியோரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Published:Updated:
திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள்

திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள்

29Comments
Share

சென்னை திருவான்மியூரில் பல்லாவரம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன், அவரின் மனைவி மர்லினா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். ஆன்டோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகள், வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த பொங்கல் தினத்தன்று விடுமுறைக்காக வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணின் மகளின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து குடும்பத்தினர், அதிர்ச்சியடைந்தனர். அதனால், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய மகளை அந்தப் பெண் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றார். அப்போது மருத்துவமனையில் தனக்கு நடந்த கொடுமைகள், காயங்கள் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அந்த இளம்பெண் டாக்டர்களிடம் கூறினார். அதனால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உளுந்தூர்பேட்டை போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

Also Read

Tamil News Live Today: திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள் கைது!

Tamil News Live Today: திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள் கைது!

இளம்பெண்

இளம்பெண்

இதையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, உளுந்தூர்பேட்டைக்கு சென்று இளம்பெண்ணிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றார். அதனடிப்படையில் கடந்த 19-ம் தேதி நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார், ஆன்டோ மதிவாணன், மர்லினா ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து, அவர்களைத் தேடிவந்தனர். ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையில் ஆன்டோ மதிவாணன் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வழக்கில் ஆன்டோ மதிவாணன், மர்லினா ஆகியோரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸாருக்கு ஆன்டோ மதிவாணனும் மர்லினாவும் தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியில் தலைமறைவாக இருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் அங்கு சென்ற தனிப்படை போலீஸார், இருவரையும் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள். விசாரணைக்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.

ஆன்டோ , மர்லினா தம்பதி - FIR

ஆன்டோ , மர்லினா தம்பதி – FIR

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், “தலைமறைவாக இருந்த ஆன்டோ மதிவாணனும் மர்லினாவும் அவர்களின் வழக்கறிஞர்களுடன் போனில் பேசிய தகவல் அடிப்படையில்தான், இருவரையும் பிடித்தோம். அவர்கள் இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டதும் இருவரும் தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்குச் சென்று தலைமறைவாகிவிட்டனர். இருப்பினும் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்த சமயத்தில்தான், வழக்கறிஞர்களுடன் இருவரும் முன்ஜாமீன் தொடர்பாக ஆலோசித்த தகவல் கிடைத்தது. அதனால் இருவரையும் பிடித்துவிட்டோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Author