“மோடி 3-வது முறை அரியணை ஏறும்போது கச்சத்தீவை மீட்பது முக்கிய முடிவாக இருக்கும்!” – ஜி.கே.வாசன் ஜூனியர் விகடன்
“மீனவர் பிரச்னையில் திமுகவும் காங்கிரஸும் நீலிக் கண்ணீர் வடிக்கிறது. மீனவர்கள் யாரும் திமுக, காங்கிரஸை ஒரு போதும் நம்பத் தயாராக இல்லை…” என்று த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் பேசியுள்ளார்.
![ஜி.கே.வாசன்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-03%2Fd2f55a6d-9e9c-4629-9756-57358759c74b%2F65169e7f5190a.jpg?rect=0%2C0%2C2545%2C1432&auto=format%2Ccompress)
ஜி.கே.வாசன்
![ஜி.கே.வாசன்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2F770b83d9-5d1b-44fa-8057-9cabd42c7011%2FIMG_20240402_004535.jpg?auto=format%2Ccompress)
அப்போது அவர் பேசும்போது, “மீனவர்களின் வாழ்வாதாரம் உயர உயர இந்திய நாட்டின் பொருளாதாரமும் உயரும். கச்சத்தீவு பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வரலாற்று பிழை செய்தது. அதற்கு திமுக துணை போனது.
மீனவர் பிரச்னையில் திமுக-வும் காங்கிரஸும் நீலிக் கண்ணீர் வடிக்கிறது. மீனவர்கள் யாரும் திமுக, காங்கிரஸை ஒரு போதும் நம்பத்தயாராக இல்லை. மூன்றாவது முறையாக மோடி அரியணை ஏறும்போது இந்தியா வல்லரசாக மாறும். அப்போது கச்சத்தீவை மீட்பது முக்கிய முடிவாக இருக்கும்.
![தேவநாதன் யாதவ்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2Fecd4cfec-146b-4e3d-a357-067985075214%2FIMG_20240402_004835.jpg?auto=format%2Ccompress)
பெண்களுடைய முன்னேற்றம் இந்தியாவின் முன்னேற்றம் என பிரதமர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திமுக அரசு மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தது போல ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
2026-ல் திமுக அரசு நீடிக்க கூடாதென்றால் இப்போது தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY