கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால்

JaffnaSri LankaNorthern Province of Sri Lanka
 6 hours ago

Kajinthan

Kajinthan

in சமூகம்

Join us on our WhatsApp Group

யாழில் (Jaffna) இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைத்துள்ளார்.

கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நினைவாலயமானது, யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

 

வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல்

வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல்

 

நிதிப் பிரச்சினை

கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்து இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன.

அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.

அடுத்தகட்ட சந்ததிக்கு எடுத்துக்காட்டு

இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்று முழுவதுமாக யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளது.

son-build-a-taj-mahal-for-late-father-in-jaffna

 

தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆலயங்களின் கட்டடக் கலைகளை உள்ளடக்கியே இந்த நினைவாலயம் அமைக்கப்பெற்றுள்ளது.

அண்மைக் காலங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வன்முறைகள், முரண்பாடுகள் தோற்றம்பெற்று வரும் நிலையில், தந்தைக்காக மகன் கட்டிய இந்த நினைவாலயமானது அடுத்தகட்ட சந்ததியை நல்வழிப்படுத்துவதற்கான முன்னுதாரணமாக உள்ளது.

 

உயிரிழந்த மகனின் மரணச் சடங்கை செய்ய முடியாத நிலையில் தவிக்கும் தாய்! முல்லைத்தீவில் சோகம்

உயிரிழந்த மகனின் மரணச் சடங்கை செய்ய முடியாத நிலையில் தவிக்கும் தாய்! முல்லைத்தீவில் சோகம்

 

 

இலங்கையில் இராமாயண பாதைத் திட்டம் ஆரம்பம்!

இலங்கையில் இராமாயண பாதைத் திட்டம் ஆரம்பம்!

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

Gallery

GalleryGallery

Author