யாழில் தமிழ் பாடலை கேட்டு வியந்துபோன ரணில்
JaffnaRanil Wickremesinghe
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில், இளைஞர் ஒருவர் பாடிய தமிழ் பாடலுக்கு பாராட்டியு்ள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் நேற்றுமுன்தினம் (24) யாழ். மாவட்ட மாநாடு இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டபோதே தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதன்போது, தென்னிந்தியாவின் மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்தின் பாடல் ஒன்றை பாடுவதற்கு அவையிலிருந்த இளைஞர்களிடையே கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய பாடல் பாடப்பட்டதுடன் பிரதேச இளைஞர்களின் திறன் மற்றும் கலாசாரத் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் ஜனாதிபதி பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |