வைத்தியர் கேதீஸ்வரனின் போதை மாத்திரை விவகாரம்: சபையில் சிறீதரன் பகிரங்கம்

Parliament of Sri LankaSri Lanka ParliamentS. SritharanDr.Archuna Chavakachcheri
 5 hours ago

Join us on our WhatsApp Group

யாழ் மாவட்ட வைத்திய அத்தியட்சகர் போதை மாத்திரை விற்பனை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மைகளை உடனடியாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் பகிரங்கப்படுத்திய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு செல்ல முன்னர் வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு அளித்த வாக்குறுதி

கொழும்பு செல்ல முன்னர் வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு அளித்த வாக்குறுதி

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“சாவகச்சேரி விவகாரம் பூதாகரமாக வெடிப்பதற்கு யார் காரணம்? நீண்டகாலமாக அந்த மக்கள் எதிர்பார்க்கும் விடயம் பூர்த்திசெய்யப்படாமையே.

இதற்கு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், மற்றும் யாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளர் ஆகியோர் இணைந்து தீர்வை கொண்டுவரவேண்டும்.

இவ்வளவு காலமாக செயற்படுத்தப்படாத அவசர சிகிச்சைப்பிரிவு உடனடியாக செயற்படுத்தப்படவேண்டும்.

அங்கு கூடியவர்கள் அர்ச்சுனா வைத்தியருக்காக மாத்திரம் கூடிய மக்கள் அல்ல. அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் செயற்படுத்தமைக்கான விளைவாகும்.” என சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு செல்ல முன்னர் வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு அளித்த வாக்குறுதி

கொழும்பு செல்ல முன்னர் வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு அளித்த வாக்குறுதி

நோயாளிகளை கைவிட்டுவிட்டு ஓடிய வைத்தியர்கள்! சாவகச்சேரி போராட்டத்தில் பெண் காரசார கேள்வி

நோயாளிகளை கைவிட்டுவிட்டு ஓடிய வைத்தியர்கள்! சாவகச்சேரி போராட்டத்தில் பெண் காரசார கேள்வி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
Author