சுகாதார அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்த உயர் அதிகாரிகள் யார்…!

JaffnaDr Ramesh PathiranaMano GaneshanDr.Archuna Chavakachcheri
 2 hours ago

Join us on our WhatsApp Group

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தான் செல்ல இருந்ததாகவும் ஆனால் அங்கு செல்ல வேண்டாம் என மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்ட முகநூல் பதிவில் மேற்கண்ட விடயத்தை ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

”சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என அறிந்ததும் நாடளுமன்றில் வைத்து அவரிடம் “சாவகச்சேரி மருத்துவமனையில் ஏதோ பிரச்சினை இருப்பதாக பேசப்படுகிறது.

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மோசடிகள் குறித்து அமைச்சர் தலைமையில் விசாரணை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மோசடிகள் குறித்து அமைச்சர் தலைமையில் விசாரணை

 

ரமேஷ் பத்திரண

உங்கள் விஜயத்தின்போது அங்கு சென்று பாருங்கள். என கூறியிருந்தேன்

பிறகு அவர் அங்கு செல்லவில்லை என அறிந்ததும், அலைபேசியில் அழைத்து,

“ரமேஷ், யாழில் ஏன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்லவில்லை? உங்கள் பயண திட்டத்தில் அது அமையப்பெறவில்லையா?

சுகாதார அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்த உயர் அதிகாரிகள் யார்...! | Health Minister For Savagacherry Hospital

 

அல்லது நிக‌ழ்ச்சி நிரல் இடையில் மாற்றபட்டதா? அங்கே சென்று பாருங்கள், என்று கூறி இருந்தேனே?” என்று கேட்டேன்.

இதற்கு பதிலளித்த ரமேஷ் பத்திரண , “சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல இருந்தேன். சிலர் வேண்டாம் என்றார்கள்.

மருத்துவ துறையை சார்ந்த சிலரே இதனை கூறியிருந்தனர். ஆனால் அந்த மருத்துவமனைக்கு 20மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என அவர் பதிலளித்திருந்தார்.” என மனோ கணேசன் கூறியுள்ளார்.

 

மகிந்தவுக்கு எதிராக வெளியான அறிக்கை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மகிந்தவுக்கு எதிராக வெளியான அறிக்கை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

 

 

5000 கோடி ரூபாய் திருமண செலவை ஒரு வாரத்தில் ஈடு செய்த இந்திய கோடீஸ்வரர்

5000 கோடி ரூபாய் திருமண செலவை ஒரு வாரத்தில் ஈடு செய்த இந்திய கோடீஸ்வரர்

 

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
Author