திருவாரூர்: கமலா ஹாரிஸ் குறித்து அவரது பூர்வீக கிராம மக்கள் கூறுவது என்ன?

அமெரிக்க துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பும் உள்ள கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊர்தான் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம் கிராமம்.

கமலா ஹாரிஸ் இதுவரை இந்த துளசேந்திரபுரம் கிராமத்துக்கு வந்ததில்லை, இந்த கிராமத்தில் அவருக்கு பூர்வீக சொத்துகள் இல்லை, உறவினர்கள் யாரும் வசிக்கவில்லை. எனினும் துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள் கமலா ஹாரிஸை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்க்கின்றனர்.

கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று துளசேந்திரபுரம் கிராம மக்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் விவரங்கள் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author