மொட்டுக்குள் பெரும் பிளவு – ரணிலுடன் இணையவுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Ranil WickremesingheSri Lanka Podujana Peramuna
 2 hours ago

Join us on our WhatsApp Group

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தின் பின்னர் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

மொட்டுக்குள் பெரும் பிளவு - ரணிலுடன் இணையவுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Slpp Members Meeting With Ranil Today

பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் சபை கூட்டத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என யோசனை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கட்சியின் கொள்கையை மீறி ஜனாதிபதி ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author